மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் இந்த வருட நட்சத்திர வீரர்களின்(All Star Game) துடுப்பாட்டப்போட்டிகள் வரும் செப்டெம்பர் மாதம் 18ம்(September 18th) திகதி ஞாயிற்றுக்கிழமை ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் நடைபெறவுள்ளமை யாவரும் அறிந்ததே.
அத்தொடருக்கான வீரர்கள் தெரிவு கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் Scarborough Civic Centerஇல் நடைபெற்றது. கடந்த வருடங்களைப் போல் இம்முறையும் 27 நட்சத்திர வீரர்கள் 9 பேர் கொண்ட மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டு 8 ஓவர்கள் கொண்ட தொடராக இப்போட்டிகள் இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இம்மூன்று அணிகளும் எம்மோடு விளையாடி, எம்மை விட்டு இறைவனடி சென்ற வீரர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
மாறன் அவர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட மாறன் மவெரிக்ஸ்(Maaran Mavericks) அணியின் உரிமையாளராக சாம் செல்வம்(Sam Selvam)மும், நிஷான் அவர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட நிஷான் நின்ஜாஸ்(Nishan Ninjas) அணியின் உரிமையாளராக கஜன் ஏரம்பமூர்த்தி(Kajan Erampamoorthy)யும், நகு மற்றும் நேசன் ஆகிய இருவரின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட N&N நைத்வாக்ஸ்(N&N Nighthawks) அணியின் உரிமையாளராக டியூட்டன் பெர்னாண்டோ(Duton Fernando)வும் செயல்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடவேண்டிய முக்கிய அம்சமாகும்.
மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரின் ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் சிறப்புமிக்கதும், பாரம்பரியதுமான MTCL Super League Challenge Trophy போட்டித்தொடரின் Super League வெற்றியாளர்களை தீர்மானிக்கும் PLAY-OFF சுற்றுப்போட்டிகள் வருகின்ற சனி மற்றும் ஞாயிறு(September 3rd & 4th) ஆகிய இரு தினங்களிலும் ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து MTCL ரசிகர்களையும் வந்து தமது விருப்பு அணிகளுக்கு ஊக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
நிஷான் அவர்களின் நினைவாக பதின்மூன்றாவது ஆண்டாக கடந்த 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை(August 28th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் நடாத்தப்பட்ட நிஷான் நினைவகச் சுற்றுக்கிண்ணத்(13th Nishan Memorial Challenge Trophy)தொடரை MTCL அமைப்பினரும், நிஷான் அவர்களின் தோழர்களும் பொறுப்பேற்று சிறந்த முறையில் நடாத்தி முடித்தனர்.
அமரர் நிஷாந்தன(Nishanthan) அவர்கள் அட்லஸ்(Atlas CC) துடுப்பாட்ட அணியில் 2003ம் ஆண்டு இறைவன் திருவடி சேரும் வரை விளையாடினார். அத்தருணத்தில் அவர் சிறந்த சகலதுறை(All Rounder) வீரராகத் திகழ்ந்தமை அவருடைய விளையாட்டுச் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
நிஷான் அவர்கள் தனது இரு நண்பர்களின் உயிரை காக்கச்சென்று கடல்மாதவிடம் தன்னுயிரை நீத்த உன்னத உள்ளம் கொண்ட புனிதனாவார். அவரின் நினைவுகளை சுமந்து வரும் அட்லஸ்(Atlas CC) துடுப்பாட்ட அணியில் விளையாடிய அவரது நண்பர்கள் மற்றும் MTCL அமைப்பினர் இத்தொடரை 2004ம் ஆண்டு முதல் அவரின் வாழ்க்கையைப் பெருமைப்படுத்தும் விதத்தில் நடாத்திவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்க வேண்டிய விடயமாகும்.
இந்த வாரத்தின் பிரதான(Premium Game)போட்டிக்கு அட்லஸ்-A(Atlas A CC) துடுப்பாட்ட அணி மற்றும் நிஷான் அவர்களின் நண்பர்கள் பிரதான அனுசரணை வழங்கி இருந்தனர். இந்த வாரத்தின் பிரதான(Premium Game)போட்டியாக கல்வியங்காடு GPS துடுப்பாட்ட அணியும், BNS துடுப்பாட்ட அணியும் மோதிக்கொண்ட போட்டி தெரிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் நேரடி போட்டிநிலவரங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் பார்த்து மகிழக்கூடிய சர்ந்தர்ப்பத்தையும் MTCL அமைப்பினர் ஏற்படுத்திக்கொடுத்தனர்.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கல்வியங்காடு GPS CC அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய BNS CC
அணி தமது 12 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட்டுக்களை இழந்து 68 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் BNS CC அணியை சேர்ந்த ஜெயஹரன் ஜெயக்குமார்(Jeyaharan Jeyakumar) 22 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் கல்வியங்காடு GPS CC அணியை சேர்ந்த சசிக்குமரன் சண்முகராஜா(Sasikumaran Shanmugarajah) 3 ஓவர்கள் பந்து வீசி 20 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பெற்றினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கல்வியங்காடு GPS CC அணி 12 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 65 ஓட்டங்களை பெற்று 3 ஓட்டங்களினால் தோல்வியடைந்தனர். துடுப்பாட்டத்தில் GPS CC அணியை சேர்ந்த சிவரூபன் ரத்னம்(Sivaruban Ratnam) 19 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் BNS CC அணியை சேர்ந்த ஹரிகரன் ஜெயக்குமார்(Hariharan Jeyakumar) சிறந்த முறையில் பந்து வீசி 3 ஓவர்களில் 14 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுக்களை
கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சில் தனது பங்களிப்பை செய்த BNS CC அணியை சேர்ந்த ஹரிகரன் ஜெயக்குமார்(Hariharan Jeyakumar) தெரிவுசெய்யப்பட்டார்.
பதின்மூன்றாவது நிஷான் நினைவகச் சுற்றுக்கிண்ணத்(13th Nishan Memorial Challenge Trophy)தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு B-Town Boyz CC, Cougars CC, BNS CC மற்றும் Youngstars CC ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றதுடன் B-Town Boyz CC அணிக்கும் Cougars CC அணிக்கும் இடையிலான போட்டியில் B-Town Boyz CC அணியும், BNS CC அணிக்கும் Youngstars CC அணிக்கும் இடையிலான போட்டியில் Youngstars CC அணியும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
Youngstars CC அணியானது மூன்றாவது முறையாக இவ்வருடம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததோடு தமது ஐந்து வருட வரலாற்றில் முதலாவது கேடயத்தை கடந்த மாதம் வெற்றி பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும், B-Town Boyz CC அணியினர் நான்கு வருடங்களின் பின்பு இறுதிப்போட்டிக்குள் நுழைந்தமையும் சிறப்பங்சங்களில் ஒன்றாகும்.
இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Youngstars CC அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய B-Town Boyz CC அணி 9.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 61 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் B-Town Boyz CC அணியை சேர்ந்த அன்றிவ் ஜோர்ஜ்(Andrew George) 18 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்து வீச்சில் Youngstars CC அணியை சேர்ந்த ரகு ஞானசௌந்தரநாயகம் (Ragu Gnanasountharanayakam) 2.2 ஓவர்களில் வெறும் 06 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பெற்றினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Youngstars CC அணி 10 ஓவர்கள் நிறைவில் மூன்று விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 64 ஓட்டங்களைப் பெற்று ஏழு விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றனர்.
துடுப்பாட்டத்தில் Youngstars CC அணியை சேர்ந்த கிஷோக் விஜேயரட்ணம்(Kishok Vijeyaratnam) 21 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் B-Town Boyz CC அணியை சேர்ந்த உமாசங்கர் சுந்தரலிங்கம்(Umashankar Sundaralingam) சிறந்த முறையில் பந்து வீசி 3 ஓவர்களில் 11 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக சகலத்துறையிலும் தனது பங்களிப்பை செய்த Youngstars CC அணியை சேர்ந்த ரகு ஞானசௌந்தரநாயகம்(Ragu Gnanasountharanayakam) தெரிவுசெய்யப்பட்டார்.
வெற்றிக்கேடயத்தை கைப்பற்றிய Youngstars CC அணிக்கும் இரண்டாம் இடம் வந்த B-Town Boyz CC அணிக்கும் MTCL அமைப்பினர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர். மேலும் வெற்றி பெற்ற youngstars CC அணிக்கு வெற்றிக்கேடயத்துடன் அடுத்த வருடத்துக்கான சீருடைக்குரிய அனைத்து செலவுகளையும் நிஷானின் நண்பர்களான செந்தில் மற்றும் சிவா பொறுப்பேற்பதாக உறுதியளித்தனர்.
இத்தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரராக நான்கு போட்டிகளில் 75 ஓட்டங்களைப் பெற்ற Youngstars CC அணியை சேர்ந்த கிஷோக் விஜேயரட்ணம்(Kishok Vijeyaratnam) தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த பந்துவீச்சாளராக மூன்று போட்டிகளில் 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய BNS CC அணியை சேர்ந்த தினேஷ் குகன்(Dinesh Kugan) தெரிவுசெய்யப்பட்டார்.
தொடரின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக நான்கு போட்டிகளில் மொத்தமாக 70 ஓட்டங்களையும், 11 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய Youngstars CC அணியை சேர்ந்த ரகு ஞானசௌந்தரநாயகம்(Ragu Gnanasountharanayakam) தெரிவுசெய்யப்பட்டார்.
இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
- ஜெய் முனியன்(Jey Muniyan) of Atlas-A CC – 56 ஓட்டங்கள் VS Sauga Boyz CC
- ஜெயதீபன் ஜெயரட்ணம்(Jeyatheepan Jeyaratnam) of B-Town Boyz CC – 37(N.O) ஓட்டங்கள் VS Chola CC
- ரகு ஞானசௌந்தரநாயகம்(Ragu Gnanasountharanayakam) of Youngstars CC – 36 ஓட்டங்கள் VS Western CC
- கிஷோக் விஜேயரட்ணம்(Kishok Vijeyaratnam) of Youngstars CC – 35(N.O) ஓட்டங்கள் VS Toronto Blues CC
சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
- பிரணவன் அருள்ஜோதி(Pranavan Arutjothy) of Toronto Blues CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS Inuvil Boys Toronto CC(3-0-07-5)
- தினேஷ் குகன்(Dinesh Kugan) of BNS CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS Warriors CC(3-0-15-5)
- சசிக்குமரன் சண்முகராஜா(Sasikumaran Shanmugarajah) of GPS CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS BNS CC(3-0-20-5)
சிறந்த பிடியெடுப்புக்கள்(BEST CATCHES)
- ஜெயஹரன் ஜெயக்குமார்(Jeyaharan Jeyakumar) of BNS CC VS Warriors CC
- நிஷாந்தன் இலங்கேஸ்வரன்(Nisanthan Ilangeswaran) of BNS CC VS Youngstars CC
- நிரோஷான் ராஜேந்திரன்(Niroshan Rajandiran) of Youngstars CC VS BNS CC
- கவாஸ்கர் தாமோதரம்பிள்ளை(Gavaskar Thamortharampillai) of Youngstars CC VS Western CC