ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு ஆப்பு வைத்த மழை

389




சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டில், நேற்று நடந்த குரூப் – ஏ பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் அணிகள் மோதின. பங்களாதேஷ் அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணி நியூஸிலாந்துடன் மோதிய போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இந்நிலையில், அடுத்த சுற்றுக்கு முன்னேற பங்களாதேஷ் அணியுடன் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது ஆஸ்திரேலியா. முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணியை 182 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து அசத்தியது ஆஸி. இதையடுத்து, ஈஸியாக ஜெயித்து விடாலம் என்று ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

ஆனால், அந்த அணி 83 ரன்கள் எடுத்திருந்த போது மழை கொட்டியது. மழை தொடர்ந்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைபடி, ஓவர் மற்றும் இலக்கு குறைக்கப்பட்டது. இருந்தபோதும் தொடர்ந்து பெய்த மழையால், ஆட்டம் எந்த முடிவும் இன்றி கைவிடப்பட்டது. இதன் மூலம், ஆஸ்திரேலியாவின் வெற்றிக் கனவை மழை மீண்டும் புஸ்வாணம் ஆக்கியுள்ளது.

இதற்கிடையே, அரையிறுதிக்கு முன்னேற ஆஸி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வென்றாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Comments
Loading...