உலகின் புகழ்மிக்க வீரர்கள்… கோலி 13-வது இடத்தையும், தோனி 15-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

451




ESPN சார்பில், உலகின் பிரபலமான 100 விளையாட்டு வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

கோலி

விளையாட்டுத் தொலைக்காட்சி நிறுவனமான ESPN ஆண்டுதோறும் பிரபலமான 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இணையதளத்தில் தேடப்படும் அளவு மற்றும் சமூக வலைதளங்களில் உள்ள புகழ் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு, பிரபலமான வீரர்களின் பட்டியலை ESPN வெளியிட்டுவருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இந்தப் பட்டியலில் 13-வது இடத்தையும், தோனி 15-வது இடத்தையும் பெற்றுள்ளனர். மேலும், இந்திய அணி வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா முறையே 90 மற்றும் 95-வது இடங்களைப் பிடித்துள்ளனர். உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ, முதலிடத்தைப் பெற்றுள்ளார். மெஸ்ஸி 3-வது இடத்தையும் ரோஜர் ஃபெடரர் 4-வது இடத்தையும் பெற்றுள்ளனர். தடகள வீரர் உசேன் போல்ட், 7-வது இடத்தில் உள்ளார்.

Comments
Loading...